அக்குரேகொடயில் சட்டத்தரணியையும் அவரது மனைவியும் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது

இலங்கையில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் தான் அக்குரேகொடயில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைக்கொலை சம்பவம்
இந்த சம்பவம் குறித்து சந்தேகநபரை உடனே கைது செய்ய பொலிஸார் சற்றுமுன் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளனர்

கடந்த பெப்ரவரி 13 அன்று அக்குரேகொட – தலங்கம என்ற டியத்தில் வீதியில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி மீதான இரட்டை கொலை வழக்கில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பி ஓட உதவிய காரை ஓட்டிச்சென்ற இந்த நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதோடு அவரது புகைப்படத்தோடு மேலதிக தெளிவான விபரங்களையும் வெளியிட்டுள்ளனர்

அவரது பெயர் – கலுவாரச்சி லியனகே நிலுக்ஷ வீரசிங்க என்றும் முகவரி – வீரசிங்க மல்பாலாவ, பரகொட, இமடுவ என்றும் அவரது
தேசிய அடையாள அட்டை எண்ணையும் வெளியிட்டுள்ளனர்

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *